Advertise Here

சீற்றம்

- Another Blogger Blog's

சுமா, நீ எவ்வளவு அழகு என்று கிண்டல் செய்து கொண்டே சுமாவை அலங்காரம் செய்து கொண்டு இருந்தனர் மணப்பெண் தோழிகள். வெட்கத்தில் சுமாவின் கண்ணங்கள் பழுத்த கோவை பழம் போல ஆயின. இனியாவது "ஏண்டி பீட...சனியனே" என்ற கடும் வார்த்தைகளை தன் அம்மாவிடமிருந்து கேட்க முடியாது என்ற சந்தோஷம் சுமாவுக்கு.

முற்பைதைந்து வயது கடந்து செல்லும் வேலையில் இப்போதாவது தன் மகளுக்கு கலயாணம் நடக்க போகிறதே என்ற சந்தோஷத்தில் வழிந்தோடிய கண்ணீரை யாரும் அறியாத வண்ணம் துடைத்து கொண்டிருந்தாள் சுமாவின் தாய். சுமா தன் கருவில் உண்டான நேரத்தில் சுமாவின் தந்தை இறந்து விட்டார். அவர் இறந்ததக்கு சுமா கருவில் உண்டான நேரம் தான் காரணம் என்ற கோவம் சுமாவின் தாயிக்கு. அந்த கோவம் முற்பைதைந்து வருடம் கடந்து சென்றும் இன்னும் அடங்கவில்லை.

"நாழி ஆகுது..பொண்ண மணமேடைக்கு அழைச்சிட்டு வாங்கோ" என்று அய்யர் குரல் கொடுக்க மணப்பெண் தோழிகள் சுமாவை ஒரு பொக்கிஷம் போல பாவித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். இளம் பஞ்சு பூ மீது வீழ்வது போல சுமா மணமேடையில் அமர்ந்தாள்.
மணமகன், சுமாவின் கழுத்தில் தாலி கட்டுவதற்காக கைகளை நீட்டினான்...."ஏண்டி பீட" விடிஞ்சி எவளோ நேரம் ஆயிடிச்சி இன்னும் என்னடி தூக்கம்? என்று வழக்கம் போல சுமாவை திட்டி தீர்த்தாள், சுமாவின் தாய்.

அந்த காலை வேளையிலும் சுமாவின் கண்கள் கலங்க தான் செய்தது...

தொடரும்.....

2 comments:

Truth said...

ரொம்ப நாள் கழிச்சு எழுதியிருக்கீங்க. நல்ல ஸ்லாங்க் மெயிண்டெயின் பண்ணியிருக்கீங்க.

ஆனா சோகமான முடிவு. கஷ்டமா இருக்கு...

Manu said...

@ Truth

நன்றி ட்ருத்... உங்க ஆதரவு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...

\\ நல்ல ஸ்லாங்க் மெயிண்டெயின் பண்ணியிருக்கீங்க \\
எல்லாம் உங்க பதிவுல இருந்து தான்...

\\ ஆனா சோகமான முடிவு. கஷ்டமா இருக்கு...\\
பதிவு முடிவுல பாருங்க...
தொடரும்....