"வானத்திலே பெரிய ஓட்டை விழுந்திடிச்சு...அதனால் தான் ஒரே மழை பெயுது" ..."சரியா படிக்கலை என்றால் சாமி கண்ணை குத்தி விடும்"...."நிறைய நண்பர்கள் இருந்தால் நான் கெட்ட பையன்"...என்னடா இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்று நினைக்காதீர்கள். இவை அனைத்தும் என் சிறு வயதில் ஆழமாக பதிந்து விட்ட சில விஷயங்கள். இந்த விஷயங்கள் அனைத்தும் சிறுபிள்ளை தனமாக இருந்தாலும் இன்னும் ஒரு விஷயம் என் சிறு வயது (அதாவது நான்கு வயது) முதலே என் மனதில் மிக மிக ஆழமாக பதிந்து விட்டது. அது என் உயிர் தோழனின் நட்பும், அவனுடன் நான் பழகிய அந்த பசுமையான நாட்களும்.
எந்த விவரமும் அறியாத அந்த வயதிலே இணைபிரியா ஜோடிகள் போல் நாங்கள் இருவரும் அந்த பள்ளி கூடத்தில் சுற்றி திரிந்தது அனைவரும் அறிவர். அந்த வயதில் என் பக்கத்தில் வருபவன் யார் என்று பல தடவை என்னுளே கேட்டு கொண்டுள்ளேன். மாலையில் பள்ளி முடிந்த பிறகு நங்கள் இருவரும் கை கோர்த்து நடந்த நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கின்றன. வீட்லிருந்து கொண்டு வரும் தின்பண்டங்களை அவனுக்கு கொடுக்கும் பொது ஏற்படும் ஆனந்தத்தின் அளவை அளந்து பார்க்க இயலாது. அதிகாலை ஒரு நாள் அவன் என்னிடம் " நாளைக்கு எனக்கு "Happy Birthday"; நீ என் வீட்டுக்கு கண்டிபாக வரணும்" என்று கூறினான். பறப்பதற்கு இறக்கை மட்டும் இருந்திரிந்தால், அன்றைக்கு இந்த விஷயத்தை கேட்டவுடனே பறந்திருப்பேன் - அவ்வளவு சந்தோஷம் எனக்கு. அடுத்த நாள் அவன் வீட்டுக்கு சென்று அவனுக்கு "Happy Birthday to you" சொன்ன நினைவுகள் இன்னும் என் நினைவில் அழியாமல் இருக்கின்றன. அந்த சிறு வயதிலே எனது பெற்றோர்கள் அவனை பற்றி பெருமையாக பேசும் போது என் மனதிற்குள் ஆனந்தம் மத்தாப்பு போல பொங்கும்.
ஆனால் "நினைபதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை" என்ற வார்த்தைகளை மெய்யாக்குவது போல காலத்தின் சடுகுடு விளையாட்டால் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். அந்த பிரிவின் தாக்கம் எங்களை அப்போது எங்களக்கு பெரிசாக தெரியவில்லை. காலம் செல்ல செல்ல அந்த பிரிவு எங்கள் மனதினை அரிக்க ஆரம்பித்துவிட்டது. எனக்கு என் வாழ்கையில் எதையோ தொலைத்து விட்ட உணர்வு தோன்றியது. அவன் பெயர் கொண்டவர்களை காணும் போது மனதிற்குள் அவனது நினைவுகள் முயல் வேகத்தில் வந்து செல்லும். ஆனால் மனதிற்குள் அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்று இருந்து கொண்டே இருந்தது. அதாவது "என்றைகாவது ஒரு நாள்; நான் அவனை சந்தித்தே தீருவேன்" என்ற ஒரு நம்பிக்கை.
காலம் வேகமாக சென்றது. சுமார் பன்னிரண்டு வருடங்கள் கழித்து "Orkut" என்று ஒரு கண்டுபிடிப்பால் என் உயிர் நட்பு என்னுடன் சேர்ந்து விட்டது. அவனை கண்டு பிடித்த உடன் முதலில் அவனிடம் பேசுவதற்கு நான் கொஞ்சம் அச்சப்பட்டேன். அவன் என்னை மறந்து இருப்பானோ; என்னிடம் பேசுவனோ மாட்டானோ? என்ற பல கேள்விகள் என் மனதில் எழும்பின. ஆனால் அவனும் என்னை பன்னிரண்டு வருடங்களாக தேடியதை கூறிய போது....கண்கள் கலங்கியே போய் விட்டன. அவனை எனக்கு கொடுத்ததற்கு இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்.
அவன் வேறு யாருமில்லை...ஒரு உண்மை-விரும்பி....
1 comments:
kalathal azhiyathathu kalvi mattum alla!!!!!!!
ungal natpum than.........
ethai padithavudan avan nanaga eruka matenoo endru aval perukirathu.......
Post a Comment